ஆண்டின் பொதுக்காலம் 15- ஆம் ஞாயிறு (B)
வாசகங்கள்: எபேசியர் 1:3-14 ஆமோஸ் 7:12-15 சங் 84 மாற்கு 6:7-13
அருட்பணி. பேட்ரிக் மத்தியாஸ்
ச.ச.
இறையேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே,
ஆண்டின் பொதுக்காலம் 15-ஆம் ஞாயிற்றுக்கிழமையை கொண்டாடி கொண்டிருக்கும் நமக்கு இன்று மாற்கு நற்செய்தியாளர், இயேசு தமது 12 திருத்தூதர்களையும் இருவர் இருவராக அனுப்பும் நிகழ்ச்சியை மனக்கன்முன் கொண்டுவருகிறார். தூய வாழ்வு வாழ்வது என்பது ஒவ்வொரு உயிருக்கும் இறைவன் கொடுத்து கொண்டிருக்கும் மாபெரும் அழைப்பு. திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலே “இயேசுவின் மனநிலையை கொண்டு வாழ” (1 கொரி 2:16) அழைப்பு விடுக்கிறார். இயேசுவின் மனநிலை என்பது தூயோராய் வாழ்தல். இதையே இன்றைய வாசகங்களும் மையப்படுத்தி கூறுகின்றன.
இன்றைய முதல் வாசகத்தில் ஆடுகள் மேய்க்கும் ஆயனாக இருந்த (ஆமோஸ் 1:1; 7:14) ஆமோஸ் இறைவாக்கினர், எருசலேமிலிருந்து 12-கிலோ மீட்டர் தொலைவிலுள்ள யூதா நாட்டிலிருந்து சென்று இஸ்ராயேல் நாட்டிற்கு இறைவாக்கு உரைக்க கடவுளால் அனுப்பப்டுகிறார். இஸ்ராயேல் நாடு செல்வமும், வசதி மிக்க மக்களும் உள்ள நாடு. ஆனால் வசதிமிக்க மக்களால் இஸ்ராயேலில் உள்ள பாமர மக்களுக்கு நடத்தப்படும் வன்ழறைகளையும், அநீதிகளையும் எதிர்த்து நீதி கேட்டு அறைகூவல் விடுகிறார். இஸ்ராயேல் நாட்டின் அரசனாம் அமஹியாயை பார்த்து அவரையும், நாட்டு மக்களும் பாவ வாழ்வை விட்டு விட்டு கடவுளுக்கு உகந்த தூய வாழ்வு வாழ அழைப்பு விடுக்கிறார். ஆனால் அமஹியா ஆமோஸின் குரலுக்கு செவிமடுக்காமல் கடவுளுக்கு எதிராக இருக்கிறார். இன்னிலையில் தான் ஆமோஸ் தான் எப்படிப்பட்ட தூய வாழ்வு வாழ கடவுளால் அழைக்கப்பட்டுள்ளார் என்பதை எடுத்து கூறுகிறார் (ஆமோஸ் 7:14-15).
இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய பவுலடிகளார் எபேசியருக்கு எழுதிய திருமுகத்தில் கிறிஸ்துவை பின்பற்றுவோர் தூய வாழ்வு வாழவேண்டும் என அழைப்பு விடுக்கிறார். உலகம் தோன்றும் முன்பே கடவுளால் தூய வாழ்வு வாழ்வதற்காக சேர்ந்து கொள்ளப்பட்ட மக்கள் நாம் எனவும், அந்த தூய வாழ்க்கை இயேசு மூலம் நமக்கு தந்தையாம் கடவுள் வெளிப்படுத்துகிறார் எனவும் கூறுகிறார். தந்தையாம் இறைவன், இயேசுவை எவ்வாறு தூய வாழ்வுக்கு தீர்ந்து கொண்டாரோ அது போலவே நம்மையும் இயேசுவின் தியாக பலியின் வழியில் அவருடைய பிள்ளைகளாக்கி தூய வாழ்வு வாழ்வதற்காக நம்மை தேர்ந்துகொண்டார் என்று தூய பவுல் அடிகளார் கூறுகிறார் (எபேசி 1:4-6).
நற்செய்தி வாசகம் : கலிலேய கடலோரம் மீன்பிடித்துகொண்டிருந்த மீனவர்களை மனிதர்களை பிடிப்பவர் ஆக்குவேன் (மாற்கு 1:16-20; மேத் 4:18-22; லூக் 5:1-11) என்று அழைத்த நொடி முதல் இயேசுவோடு பயணித்து பல புதுமைகளுக்கும், வல்ல செயல்களுக்கும் சான்று பகர்ந்த திருத்தூதர்கள் இன்றைய நற்செய்தியில், இன்று விதியாசமாக இயேசுவே தமது வல்லமையை சீடர்களுக்கு அளித்து, இறைப்பணியாற்ற இருவர் இருவராக அனுப்புகிறார். இறைமகன் இயேசு திருத்தூதர்களுக்கு கொடுத்த இந்த வல்லமையும், ஞானமும் அவரோடு இணைந்து புனித வாழ்வு வாழ்வதற்கான முன்தயாரிப்பாக பார்க்கப்படுகின்றது. அதற்கான முத்தாய்ப்பாக இறைப்பணியில் எப்படி வாழவேண்டும் என்று அறிவுரை கூறுகிறார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட வாழ்வு வாழ அழைப்பு
இயேசு தாம் தேர்ந்தெடுத்தவர்களை குறிப்பிட்ட காலம் வரை தம்முடன் பயணிக்க வைத்து தயாரித்த பின்பு தமது பின்பற்றி தந்தையின் திருவுளம் நிறைவேற்றவும், அவரின் பணியை செய்து வாழ தேர்ந்தெடுத்து அனுப்புகின்றார். சீடர் என்பவர் குருவை பின் தொடர்பவர்கள் ஆனால்,
திருத்தூதர்களோ குருவின் பணியில் பங்கு பெற தேர்ந்தெடுத்து அழைக்கப்படுகிறார்கள் என்பதை இயேசு தெள்ளத்தெளிவாக அவர்கள் செய்ய இருக்கும் பணிமூலம் எடுத்து கூறுகிறார். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மறு இயேசுவாகவே வாழ அழைக்கப்படுகின்றனர்.
இன்றைய நற்செய்தியில் இயேசு தமது திருத்தூதர்களை இருவர் இருவராக அனுப்புகிறார் (மாற்கு 6:7). இதுவரை இயேசு செய்த புதுமைகளை கண்டவர்கள் இன்று இயேசுவால் மறைபரப்பாற்ற அனைத்து அதிகாரமும் வழங்கப்பட்டு நற்செய்தி பணிக்காக அனுப்பப்படுகின்றனர். ஏன் திருத்தூதர்கள் இருவர் இருவராக அனுப்பப்படுகின்றார்கள்? இருவர் இருவராக அனுப்பப்பட காரணம் பழைய ஏற்பாட்டில் எந்த நிகழ்விலும் ஒருவர் கூறும் சாட்சி எடுத்துகொள்ள பட மாட்டாது (இணை 17:6;
19:15; எண் 35:30).
“இருவர்” என்பது எதேனும் முக்கிய நிகழ்வுகளுக்கு சாட்சிகளாக இருப்பதற்காக தேர்ந்தெடுப்பார்கள. ஆனால், இயேசு இருவர் இருவராக அனுப்புவதற்கு காரணம் யூத மரபுபடி ஒருவர் மற்றவருக்கு சாட்சி என்று எடுத்துகொண்டாலும் அதன் முக்கியத்துவம் யூத மரபையும் கடந்து ஒருவர் மற்றவருக்கு உடன் இருப்பதற்கும், குழு உணர்வோடு செயல்படுவதற்கும் முத்தாய்பாக அமைக்கிறார்.
எளிய வாழ்வு வாழ அழைப்பு
பயணம் செய்யும் போது சில தேவையான பொருடகளை கொண்டு செல்வது வழக்கம். ஆனால் இன்று இயேசு நற்செய்தியில் தமது திருத்தூதர்களிடம் அனுதின வாழ்விற்கு தெவையான எதையும் எடுத்துகொண்டு போக வேண்டாம் என்று கூறுகிறார். காரணம், இறைப்பணியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கடவுளை மட்டுமே சார்ந்து வாழ வேண்டும் என்று அழைப்பை விடுகிறார். இயேசு இவ்வுலகில் வாழ்ந்த வாழ்வில் தமக்கென உரிமை கொண்டாட எதையும் வைத்துக்கொள்ளவில்லை. அதே பற்றற்ற வாழ்வை சீடர்களுக்கும் கற்றுக் கொடுக்கிறார். வானத்து பறவைகளை பாருங்கள் அவை விதைப்பதும் இல்லை,
அறுபதும் இல்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதும் இல்லை (மத் 6:28-20). இறைப்பணி என்பது மிகவும் முக்கியத்தன்மை வாய்ந்தது. அப்படி பட்ட பணிக்கு உலகை சார்ந்த பொருட்கள் ஓர் தடையாக அமைந்திட கூடாது என்பதில் இயேசு கவனமாக இருக்கிறார். அதுபோல திருத்தூதர்களையும் வாழ அழைப்பு விடுகின்றார்.
பணி வாழ்வு வாழ அழைப்பு
இயேசு திருத்தூதர்களுக்கு எதிர்காலத்தில் அவர்கள் எதிர்கொள்ளவிருக்கும் பணிவாழ்வின் முக்கியதுவத்தை இன்றைய நற்செய்தியில் எடுத்து கூறுகிறார். இறைப்பணி என்பது புதுமைகளை மட்டும் செய்வதல்ல, மாறாக மக்களை விசுவாசத்தில் திடப்படுத்துவது என்பதை நோயுற்றவருக்கு ஆசீவழங்குவதின் மூலம் தெளிவு படுத்துகிறார். யூதர்கள் வாழ்வில் எண்ணெய் முக்கிய பங்காற்றுகிறது. எண்ணெய்யால் காயங்களை குணப்படுத்துவது யேசுவின் காலத்தில் இருந்த ஒரு பழக்கம். பல நேரங்களில் பல விதமாக பயன்படுத்தும் எண்ணெயை, இன்று முதல் முறையாக இயேசு நோயுற்றவரை ஆசீர்வதிக்க பயன்படுத்த அறிவுரை கூறுகிறார்.
இரண்டாவதாக, தம்மை ஏற்காத மக்களிடமிருந்து வெளியேறும் பொழுது காலில் உள்ள தூசியை தட்டிவிட பணிக்கிறார். தூசியை தட்டுதல் என்பது யூத மதத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு பழக்கம். யூதர்கள் யாரேனும் சமாரியார் அல்லது யூதர்கள் அல்லாத பகுதிக்கு சென்று திரும்பி வரும்போது காலில் உள்ள தூசியை தட்டி விட்டு திரும்பவர். இந்த சடங்கின் மூலம் யூதர்கள் தங்களை தூய்மைப்படுத்தி கொள்கின்றனர் என்று நம்பினர். இதுவரை அன்னியாகளுக்கு செய்த செயலை இன்று இயேசு தமது யூத மக்களுக்கு எதிராகவே செய்ய அழைப்பு விடுக்கிறார். இதனால், தமது சீடர்களுக்கு இறைப்பணி ஆற்றும் பொழுது ஏற்படும் இன்னல்களை, நிராகரிப்புகளை மட்டும் பாராமல், இறையாட்சியின் மலர்ச்சிக்கு மட்டுமே பணி செய்து வாழ அழைப்பு விடுக்கிறார்
தூயதோர் உள்ளத்தோர் பேறு பெற்றோர் என்று இயேசு மலைபொழிவில் மொழிந்த வார்த்தைகளை இன்று தம் சீடர்களையும் வாழ்வாக்கி வாழ அழைப்பு விடுக்கிறார். இயேசு என்றும் தந்தையாம் கடவுளின் கட்டளைக்கு கீழ்படிந்து அவர் கொடுத்த மீட்பு பணியை (எபே 5:2 யோவா 3:16) நிறைவேற்றுவதிலியே குறிக்கோளாக இருந்தார். கடவுளின் மீட்பின் திட்டத்தில் இயேசு மட்டும் அல்ல திருழுழுக்கின் வாழியாக தூய வாழ்வு வாழ அழைக்கப்பட்ட நாம் அனைவரும் பங்கு பெறுகிறோம் என்று உணர்ந்து வாழ்வோம். இறைப்பணிக்கு சான்று அழைக்கப்பட்ட நாம்,
நம் வாழ்வில் எழும் சோதனைகளுக்கு எதிராக முழு மனதுடன் எதிர்த்து இறைவார்த்தையை கேட்க காத்திருக்கும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முழு முயற்சியுடன் பணியாற்றுவோம்.
அருட்பணி பேட்ரிக் ச.ச
Short and crispy... Well fried thoughts
ReplyDeleteThank you for your encouraging words. You and I are called to carry forward the mission of Christ- Amen...
Deleteமிகவும் அருமையான நமது பைபிள் பதிவேடுகளை மிகவும் அழகாக கூறியிருக்கிறார்கள் தங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மதர் எங்கள் குடும்பத்திற்கும் தேவையான கருத்துக்களையும் நீங்கள் இதில் அழைத்து இருக்கிறீர்கள் அதற்காக எனது சார்பாகவும் எனது குடும்பத்தின் சார்பாகவும் மிகுந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் மென்மேலும் உங்கள் பணி தொடர எங்களுடைய வாழ்த்துக்களும் ஜெபங்களும் உங்களுக்கு எப்பொழுதுமே நாங்கள் இறைவனை வேண்டி பிரார்த்திக்கிறோம் ஆமென்
ReplyDeleteஉங்களுடைய அன்பான வார்த்தைகளுக்கும் ஜெபங்களுக்கும் நன்றி. இறை பனி செய்ய நாம் அழைக்கப்பட்டிருக்கின்றோம். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
ReplyDelete