Posts

Showing posts from July, 2024

மறையுரை - ஆண்டின் பொதுக்காலம் 17- ஆம் ஞாயிறு (28 ஜூலை 2024 )-அருட்பணி. பேட்ரிக் மத்தியாஸ் ச.ச.

Image
  மறையுரை   - ஆண்டின் பொதுக்காலம் 17- ஆம் ஞாயிறு ( 28 ஜூலை 2024 ) வாசகங்கள்:   2 அரசர்   4: 42-44    திருப்பாடல்   145     எபேசி 4:1-6      யோவான்    6:1-15 தியானிக்க : இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார் -  யோவான்  6: 11   இறை இயேசுவில் அன்புமிக்க சகோதர சகோதரிகளே , ஆண்டின் பொதுக்காலம் 17- ஆம் ஞாயிற்றுக்கிழமையை கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம் . இன்றைய வாசகங்கள் ( முதல் வாசகம் மற்றும் நற்செய்தி வாசகம் ) இறைமகன் இயேசு அப்பங்களை பலுகச்செய்யும் அரும் அடையாளத்தைப் பற்றி சிந்திக்க நமக்கு அழைப்பு விடுக்கின்றது . கடந்த ஞாயிற்றுக்கிழமைகளில் , புனித மாற்கு எழுதிய நற்செய்தி ஆறாம் அதிகாரத்திலிருந்து தியானித்துக்கொண்டு வந்தோம் .  இந்த வாரம் முதல் வருகின்ற ஐந்து வாரங்களுக்கு , நாம் யோவான் நற்செய்தி ஆறாம் அதிகாரத்திலிருந்து வாசிக்க இருக்கின்றோம் . இயேசு செய்த இந்த அரும் அடையாளம் , அவரை “ வாழ்வு தரும் உணவாக ” எடுத்துக் காட்டுவதற்கு காரணமாக அமைகின்றது . இன்